தாய் தந்தையின் விவாகரத்து குழந்தையை எப்படிப் பாதிக்கும் என்பது அவர்களின் வயது, ஆளுமை மற்றும் விவாகரத்தின் சூழ்நிலைகளைப் பொறுத்தது ஆகும். விவாகரத்து என்பது குடும்ப வாழ்வில் உணர்வுப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆகும் அது குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க கூடும் அதைப்பற்றிய சிறிய விளக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன் தெரிந்துகொள்ளுங்கள்.
உணர்ச்சி ரீதியான விளைவுகள்.
- மன அழுத்தம் மற்றும் குழப்பம்: குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையில் ஏற்படுகிற சண்டை சச்சரவுகளினாலும் அவர்களுக்கு இடையில் ஏற்படுகிற விவாகரத்து வழக்கினாலும் மன அழுத்தங்களுக்கும் குழப்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
- சோகம் அல்லது துக்கம்: பெற்றோர்கள் விவாகரத்தினால் பிரியும்போது இது மிகப்பெரிய இழப்பாக குழந்தைகளுக்கு தோன்றலாம் இதனால் அவர்கள் சோகமாக மன அழுத்தத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
- கவலை அல்லது பயம்: விவாகரத்துக்கு பிறகு குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சூழ்நிலைகளில் ஏற்படுகிற மாற்றத்தினால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு பயத்தை அது ஏற்படுத்தலாம். தாய் தந்தையை பிரியும் குழந்தைகள் பாதுகாப்பான வாழ்க்கையில் பாதுகாப்பை உணராமல் போகலாம் இதனால் அவர்கள் கவலையாக காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
- கோபம்: விவாகரத்திற்கு பிறகு குழந்தைகளின் வாழ்க்கையில் புதிய தந்தையோ அல்லது தாயையோ அவர்கள் பெரும் போது அவர்களோடு வாழ்வதற்கு அவர்கள் மனம் ஒத்துப் போகாமல் இருக்கலாம் இதனால் அவர்கள் கோபமடைந்து வாழ்க்கையை வெறுக்க கூடிய ஒரு சூழ்நிலைக்கு போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
நடத்தை ரீதியான விளைவுகள்.
- நடத்தையில் மாற்றங்கள்: விவாகரத்திற்கு பிறகு குழந்தைகள் வாழ்க்கை மாற்றத்திற்கு தன் மனதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லாத சூழ்நிலையில் அவர்களுடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது பெரியவர்களிடம் மோசமாக அவர்கள் நடந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது பெரியவர்களிடமிருந்து அவர்களை அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது.
- கல்விச் சவால்கள்: விவாகரத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தினால் கல்வியில் கவனம் குறைந்தும் செயல்திறன் குறைந்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காணப்படலாம்.
- எதிர்ப்பு அல்லது தவறாக நடத்தல்: பதின்ம வயதினர் தங்கள் மன உளைச்சலை ஆபத்தான அல்லது முரண்பாடான நடத்தை மூலம் வெளிப்படுத்தலாம்.
சமூக விளைவுகள்.
- உறவுப் போராட்டங்கள்: விவாகரத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய உறவு முறைகளில் நம்பிக்கை மற்றும் சிக்கல்களை அவர்கள் மனது எதிர்கொள்ளலாம் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படலாம்.
- விசுவாசத்தை மாற்றுதல்: “யார் பக்கம்” என்று “தேர்ந்தெடுக்க” அழுத்தம் கொடுப்பது ஒன்று அல்லது இரண்டு பெற்றோருடனான உறவுகளை பாதிக்கலாம்.
பெற்றோர்களின் பிரச்சனைகளால் குழந்தைகளை பாதிக்கும் காரணிகள்.
- பெற்றோரின் மோதல்: பெற்றோரின் மோதல்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளால் குழந்தைகள் வாழ்க்கையை பாதுகாப்பாக உணர முடியாது.
- பெற்றோரின் தரம்: ஒற்றுமையில்லாத பெற்றோர்களால் குழந்தைகளின் வாழ்க்கையில் மனநலத்தில் ஒரு முன்னேற்றத்தை கொண்டுவர முடியாது. எப்போதும் சண்டை போடும் பெற்றோர்கள் தரமான பெற்றோராக ஒரு குழந்தைக்கு இருக்க முடியாது.
- ஸ்திரத்தன்மை: பெற்றோர்களின் விவாகரத்து காரணமாக பிரியும் குழந்தைகள் ஒரு சீரான வாழ்க்கைச் சூழலில் வாழ முடியாது அவர்களின் பள்ளி மற்றும் நண்பர்களை அவர்கள் பிரியக்கூடிய சூழ்நிலை அவர்களின் மனநிலையில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும்.
- குழந்தையின் வயது: சிறிய குழந்தைகள் விவாகரத்தைப் புரிந்து கொள்ள சிரமப்படலாம், அதே நேரத்தில் பெரியவர்கள் அதை வித்தியாசமாக உள்வாங்கிக் கொள்ளலாம்.
நேர்மறை விளைவுகள்.
சவாலாக இருந்தாலும், விவாகரத்து சில சமயங்களில் குழந்தையின் சூழலை மேம்படுத்தலாம், அதிக மோதல் அல்லது துஷ்பிரயோக சூழ்நிலையிலிருந்து அவர்களை அகற்றினால். காலப்போக்கில், சரியான ஆதரவுடன், பல குழந்தைகள் நன்றாகத் தழுவி, மீள்சக்தி(resilience) வளர்த்துக் கொள்கிறார்கள்.
பெற்றோரின் பங்கு.
எதிர்மறை விளைவுகளைக் குறைக்க:
- வெளிப்படையான தொடர்பை வளர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் விவாகரத்து அவர்களின் தவறு அல்ல என்று குழந்தைக்கு உறுதியளிக்கவும்.
- அவர்களை சண்டைகளின் நடுவில் வைக்க வேண்டாம்.
- இரண்டு வீடுகளிலும் நிலையான மற்றும் வளர்க்கும் சூழலை உருவாக்கவும்.
- குழந்தை நீண்ட காலமாக மன உளைச்சலின் அறிகுறிகளைக் காட்டினால் தொழில்முறை உதவியை நாடுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக பிரதிபலிக்கிறார்கள், எனவே அவர்களின் தேவைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.