விவாகரத்து வழக்கை விரைவுபடுத்துவது எப்படி?

விவாகரத்து வழக்கை விரைவுப்படுத்துவதற்கு தயாரிப்பு, ஒத்துழைப்பு, மற்றும் உத்தி தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் ஒன்றாக செயல்முறைப்படுத்தினால் தான் உங்கள் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க முடியும் மேற்கண்ட அனைத்து செயல்முறைகளையும் இந்த கட்டுரையில் வரையறுத்து கூறியுள்ளேன் அதை ஒன்றன்பின் ஒன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

போட்டியற்ற விவாகரத்தைத் தேர்வு செய்யுங்கள் (Uncontested Divorce).

விவாகரத்து செய்வதற்கு முன்பாக சொத்துக்கள் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வர வேண்டியது அவசியம் அவசியமாகும். கணவனும் மனைவியும் சேர்ந்து சொத்துக்களை வாங்கி இருந்தால் அதை பிரித்துக் கொள்ளலாம் அல்லது கணவனிடம் இருந்து பராமரிப்பு தொகையோ சொத்துக்களோ மனைவிக்கு தேவைப்பட்டால் மனைவியும் மனைவிடம் இருந்து சொத்துக்கள் தேவைப்பட்டால் கணவனும் முன்கூட்டியே பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். குழந்தைகள் இருந்தால் முன்கூட்டியே குழந்தைகளுக்கான பராமரிப்பு பற்றி கணவன் மனைவி பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு போட்டி இல்லாத ஒரு விவாகரத்து நடைமுறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

சொத்து பிரிவினை, பராமரிப்பு மற்றும் ஆதரவு போன்ற முக்கிய பிரச்சனைகளை பற்றி மனைவி கணவருடன் பேசுங்கள் கணவர் மனைவியுடன் பேசுங்கள். இருவரும் பேசி ஒரு முடிவை எடுத்து அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து உடன்படுங்கள் இது நீண்ட நீதிமன்றப் விவாதங்களை தவிர்க்கிறது மற்றும் நீதிமன்றத்தில் விரைவாக processed செய்ய உதவியாக இருக்கும்.

அனுபவம் வாய்ந்த விவாகரத்து வழக்கறிஞரை நியமிக்கவும்.

ஒரு அனுபவம் வாய்ந்த திறமையான வழக்கறிஞர் உங்கள் வழக்கை காலதாமதம் இல்லாமல் விரைவாக நடத்த முடியும் அந்த வழக்கில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை திறம்பட பேசி சரியான ஆவணங்களை துல்லியமான நேரத்தில் தாக்கல் செய்து தவறுகளால் ஏற்படும் தாமதங்களை அவர் தவிர்ப்பதன் மூலமாக உங்கள் வழக்கை விரைவாக நடத்த முடியும்.

ஆவணங்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வழக்குக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே சேகரித்து ஒழுங்கமைத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் வழக்கறிஞரோ அல்லது நீதிமன்றமோ கோரிக்கை வைக்கும் போது உடனடியாக நீங்கள் அந்த ஆவணங்களை அவர்களுக்கு கொடுப்பதன் மூலமாக வழக்கை காலதாமதத்திலிருந்து தவிர்த்து உங்கள் வழக்கை விரைவு படுத்த முடியும்.

எடுத்துக்காட்டு : திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று, குழந்தையின் பிறப்பு சான்று, குற்ற வழக்குகள் இருந்தால் அதற்கான சான்றுகள், வருமான வரிக் கணக்குகள் மற்றும் சொத்து பத்திரங்கள்.

மத்தியஸ்தம் அல்லது மக்கள் நீதிமன்றத்தைத் தேர்வு செய்யுங்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு பதிலாக மத்தியஸ்தம் செய்து பாருங்கள் குடும்பப் பெரியோர்கள் மூலமாக பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுங்கள் அல்லது மக்கள் நீதிமன்றம் மூலமாக ஒரு வழக்கை சமரசம் செய்து கொள்ள முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.


பேச்சுவார்த்தை மூலமாக வழக்குகளை தீர்த்துக்கொள்வது வழக்குகளை வேகமாக முடிக்கும் நடைமுறையாக கருதப்படுகிறது, இதனால் பெரும்பாலான செலவுகளையும் குறைக்க முடியும்.

உங்கள் துணைவருடன் வெளிப்படையாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழக்கு தொடர்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டால் உங்களுடைய துணைவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் அதாவது கணவன் மனைவியுடன் அல்லது மனைவி கணவனருடனும் நேரடியாக தொடர்பு கொள்வதால் பிரச்சனையை எளிதாக முடிக்க முடியும்.

மூன்றாம் நபரின் பேச்சுவார்த்தையினால் பிரச்சனை அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, இது வீண் மோதலை தவிர்க்கவும் ஒரு சிறந்த வழியாகும்.

தேவையற்ற நகர்வுகளைத் தவிர்க்கவும்.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது நீதிமன்றத்திற்கு வெளியே தேவையில்லாத மோதல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் புதிய விசாரணை கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். புதிய மோதல்கள் மற்றும் புதிய விசாரணை மனுக்களினால் வழக்கு காலதாமதப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

மாநில சட்டங்களைப் புரிந்து கொண்டு பின்பற்றவும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன அந்த சட்டங்களை சரியாக பின்பற்றுங்கள் கால தாமதங்களை தவிர்ப்பதற்கு புதிய மனுக்களை தாக்கல் செய்வதற்கு முன்பாக மனுக்களின் நிபந்தனைகள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா சரியான சட்டங்களுக்கு உட்பட்டு தான் இந்த மனு இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் இதனால் வீண் காலதாமதம் ஏற்படுவதை நாம் முன்கூட்டியே தவிர்த்துக் கொள்ள முடியும்.

காத்திருப்பு காலங்களை அனுமதிக்காதீர்கள்.

நீதிமன்ற வழக்குகளில் குறிப்பிட்ட விசாரணைகளுக்கு அதிகப்படியான காலங்களை எடுத்துக் கொள்ளாமல் உரிய காலத்திற்குள் அந்த விசாரணையை முடித்து விடுவதற்கு உங்கள் வழக்கறிஞரிடம் பேசுங்கள். எதிர்தரப்பு தேவையில்லாமல் வழக்குகளை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

வழக்கு மனுக்களை தாக்கல் செய்வதற்கு அதிக காலங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள், எதிர்மனுக்களை தாக்கல் செய்ய அதிக காலங்கள் எடுத்துக் கொள்வதற்கு எதிர்மனுதாரரை அனுமதிக்காதீர்கள் இந்த நடைமுறையை பின்பற்றினால் உங்கள் வழக்கை விரைந்து நடத்த முடியும்.

இறுதி இலக்கில் கவனம் செலுத்துங்கள்.

வழக்கின் முக்கிய காரணத்திற்கு அதிகப்படியான கவனத்தை கொடுங்கள் தேவையில்லாத புதிய மனுக்களுக்கு பதிலளித்து வழக்கின் காலத்தை அதிகரிக்காதீர்கள்.

சிறிய பிரச்சினைகளில் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதைத் தவிர்க்கவும். பெரிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் மற்றும் சிறிய கருத்து வேறுபாடுகளில் இருந்து விரைவாக முன்னேறுங்கள்.

முன்னெச்சரிக்கையுடனும், ஒத்துழைப்புடனும், கவனம் செலுத்தியும் உங்கள் வழக்கை நடத்தினால் உங்களுடைய விவாகரத்து வழக்கை விரைந்து முடிக்க முடியும்.

வழக்கறிஞரை அடிக்கடி மாற்றாதீர்கள்.

உங்களுடைய வழக்குகளை நடத்தும் வழக்கறிஞரை சந்தேகப் பார்வையில் அணுகி வேறு வேறு வழக்கறிஞரிடம் உங்கள் வழக்கை மாற்றும் போது தேவையில்லாத காலதாமதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதை தவிர்ப்பதன் மூலமாக உங்களுடைய வழக்கை நீங்கள் விரைந்து நடத்தி முடிக்க முடியும்.

வழக்குகளை ஒரு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பதற்கு முன்பாகவே அவர் தகுதியான வழக்கறிஞரா என்று அவரிடம் கலந்தாலோசித்த பிறகு வழக்குகளை ஒப்படையுங்கள் இதனால் வழக்கில் தேவையில்லாத காலதாமதங்களை நீங்கள் தவிர்க்க முடியும்.

Leave a comment